Thursday, March 26, 2020

வக்ராசனம்.


               ''வக்ரா'' என்றால் முறுக்குதல் என்று பொருள் ... இந்த ஆசனத்தில் உடல் திருக்கப்படுவதால் இது ''வக்ராசனம்'' என பெயர் பெற்றது. இந்த ஆசனம் அனைத்து வயதினரும் பயிற்சி செய்யும்படி அமைந்துள்ள ஒரு எளிய ஆசனம்.


Wednesday, March 25, 2020

வரலாற்றை பறைசாற்றும் டைரி - ஆனந்தரங்கம் பிள்ளை - பகுதி 3.


               புதுச்சேரியில் வருவாய்துறை அதிகாரியாக பணியாற்றியவர்  ''அர்மோன்கலுவா மொபார்''.  பிரெஞ்சுக்காரர்.  எனினும் தமிழ்மொழியின்  மீதுள்ள பற்றினால் தமிழை நன்கு கற்றுத் தேர்ந்தார்.

               1846 ம் ஆண்டு புதுச்சேரியில் வருவாய்துறை அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்த வேளையில் ஆனந்தரங்கப் பிள்ளையை பற்றியும் அவர் பிரெஞ்சு திவான்களுக்கு மிக நெருங்கிய நண்பராக இருந்து வந்ததையும் நண்பர்கள் வாயிலாக அறிந்து கொண்டார். எனவே ஆனந்தரங்கப் பிள்ளை வாழ்ந்து வந்த மாளிகை போன்ற வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு ஏற்பட்டது.


Thursday, March 19, 2020

வரலாற்றை பறைசாற்றும் டைரி - ஆனந்தரங்கம் பிள்ளை - பகுதி 2.


               நம்மில் நிறையபேருக்கு ''டைரி'' எழுதும் பழக்கம் இருக்கலாம். கடை கணக்கு, பால் கணக்கு எழுதி வைப்பது பலருடைய பொது வழக்கம். ஆனால் சிலரோ காளை பருவத்தில் காதலிக்கு கவிதை வடித்து வைத்திருப்பர் .... பின் வெகுகாலம் கழித்து தள்ளாத வயதிலும் மனம் கொள்ளாமல் அதை தூசிதட்டி புரட்டி பார்த்தால் காதலியின் நினைவோ நெஞ்சை மூழ்கடிக்கும் ... இதயம் படபடக்கும், மனதோ சிறகடிக்கும், மீண்டும் அந்த பருவம் செல்ல உள்ளம் துடிதுடிக்கும் ....


வரலாற்றை பறைசாற்றும் டைரி - ஆனந்தரங்கம் பிள்ளை - பகுதி 1.


பெயர் :- விஜய ஆனந்தரங்கப் பிள்ளை.

பிறப்பு :- 30.03.1709. சென்னை - பெரம்பூர்.

தந்தை :- திருவேங்கடம்.

மனைவி :- மங்கதாயி அம்மாள்.

குழந்தைகள் :- மகன் - 2, மகள் - 3.


தொழில் :- வணிகம், அரசியல் மற்றும் மொழி பெயர்ப்பாளர்.

மறைவு :- 1761 ம் ஆண்டு ஜனவரி 10 - பாண்டிச்சேரி.

Tuesday, March 10, 2020

அர்த்த உத்தானாசனம் - Ardha Uttanasana - yoga.


               ''அர்த்த'' என்றால் ''பாதி'' என்று அர்த்தம். ''அர்த்த உத்தானாசனம்'' என்றால் ''பாதி உத்தானாசனம்'' என்று பொருள். உத்தானாசனம் என்னும் பயிற்சியில் இடுப்பிலிருந்து உடல் இரண்டாக முழுமையாக மடிக்கப்படும்.

Monday, March 09, 2020

ஜானு சீராசனம் - janu sirsasana - yoga.


               நாம் நம் தளத்தில் தொடர்ந்து பல யோகாசன பயிற்சிகளை பார்த்துவருகிறோம் . முதலில் யோக பயிற்சி செய்ய முற்படுவோர் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அது என்னவெனில் ஒரு குறிப்பிட்ட யோக பயிற்சியை செய்ய முற்படும் போது இந்த பயிற்சி செய்ய நம்முடைய உடல் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமா என்பதனை முதலில் கவனிக்க வேண்டும்.


Sunday, March 08, 2020

பொது அறிவு தரும் புது அறிவு.


  • ஆல்கஹாலின் கொதிநிலை - 78 ⁰ C.
  • நைட்ரஜனின் கொதிநிலை - 196 ⁰ C.
  • யூரியாவின் உருகு நிலை - 135 ⁰ C.
  • பனிக்கட்டியின் உருகு நிலை - 0 ⁰ C .


Thursday, February 27, 2020

எக்ஸோமார்ஸ். ExoMars 2016 part - 2.


               சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செவ்வாய் கிரகம் பற்றி அறிய கடந்த 2011 ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் தேதி புளோரிடாவிலுள்ள ராக்கட் ஏவுதளத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ''கியூரியாசிட்டி ரோவர்'' (Curiosity rover) என்ற விண்கலம் அமெரிக்காவால் அனுப்பி வைக்கப்பட்டது.


Saturday, February 22, 2020

எக்ஸோமார்ஸ். ExoMars 2016 part - 1.


               பூமியில் மனிதன் தோன்றி பலகோடி வருடங்களாகி விட்டன. பலநூறு வருடங்களுக்கு முன்னால் மனித இனம் விண்வெளியை கூர்ந்து கவனிக்க தொடங்கியது. விளைவு, பரந்து விரிந்துள்ள விண்வெளியும், அந்த விண்வெளியுடன் ஒப்பிடும்போது ஒரு தூசி போல மிதந்து கொண்டிருக்கும் பூமியும் மனிதனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.


Monday, February 10, 2020

பிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Gland - Hypophysis. Part - 3.


               பிட்யூட்டரி சுரப்பியின் முன்புற கதுப்பான ''அடினோ ஹைப்போபைஸிஸ்'' ல் சுரக்கும் சுரப்பில் உள்ள 5 விதமான ஹார்மோன்களை பற்றி முன்பு பார்த்தோம். இனி பின்புற கதுப்பான ''நியூரோஹைப்போபைஸிஸ்'' பற்றி பார்ப்போம்.Thursday, February 06, 2020

பிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Gland - Hypophysis.part - 2


               உடலிலுள்ள அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் திறமையாக செயல்பட தூண்டுவது பிட்யூட்டரி சுரப்பி என்பதால் இது ''சுரப்பிகளின் தலைவன்'' (Master gland) என அழைக்கப்படுகிறது.


               இந்த பிட்யூட்டரி சுரப்பியானது அனைத்து நாளமில்லா சுரப்பிகளையும் கட்டுப்படுத்தும் தலைமை சுரப்பி என்றாலும் இந்த சுரப்பியானது மூளையிலுள்ள ''ஹைபோதலாமஸ்'' என்னும் ஒரு உறுப்பின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகிறது. அதாவது பிட்யூட்டரி பிரதம மந்திரி என்றால் ஹைபோதலாமஸ் அதிபராக செயல்படுகிறது. எனவே இங்கு அதிபரின் கட்டளைக்கு கட்டுப்பட்டே பிரதம சுரப்பியாகிய பிட்யூட்டரி செயல்படுகிறது.

Tuesday, January 28, 2020

பிட்யூட்டரி சுரப்பி - ஹைப்போபைஸிஸ். Pituitary Gland - Hypophysis. Part - 1.


               ''எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்'' என்றார் மூதறிஞரான நம் ஔவைப்பாட்டி. அத்துணை சிறப்பு பெற்றது நம் மூளை. ஏனெனில் நம்முடைய உடலின் ஒவ்வொரு அசைவையும் கட்டுப்படுத்துவது மூளையே. உள்ளுறுப்பு, வெளியுறுப்புகள் மட்டுமல்ல நம் சிந்தையில் எழும் அத்தனை எண்ணங்களை இயக்குவதும் இதே மூளைதான். மூளையை உயிரின் தலைமையகம் எனலாம் .


Tuesday, January 21, 2020

உணவுகளும் கரிம அமிலங்களும் - அறிந்து கொள்ள சில.


               உடலின் சீரான வளர்ச்சிக்கும். ஆரோக்கியத்திற்கும் பலவிதமான சத்துக்கள் மட்டுமல்லாது சிலவகையான கார சத்துக்களும், அமில சத்துக்களும் நம் உடலுக்கு தேவையாகின்றன.


Tuesday, January 14, 2020

புஜங்காசனம் அல்லது சர்ப்பாசனம் - Bhujangasana or Sarpasana cobra pose


               ஆசனங்களில் மிகவும் சிறப்புப் பெற்றது ''புஜங்காசனம்'' எனலாம். சூரிய நமஸ்கார பயிற்சியில் இதனுடைய பங்களிப்பும் மிக அதிகம். ஆண், பெண் முதற்கொண்டு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் எளிதாக இப்பயிற்சியை மேற்கொள்ள முடியும்.Monday, January 13, 2020

பட்சி மோத்தாசனம் - Paschimottanasana.


               யோகாசனப் பயிற்சியானது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் புத்துணர்ச்சியை தரவல்லது. தினந்தோறும் குறைந்தது அரைமணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்கு ஆரோக்கியத்தையும். சுறுசுறுப்பையும் கொடுக்கும்.               இங்கு இப்போது உடலுக்கு அற்புத பலன் தரும் ''பட்சி மோத்தாசனம்'' என்னும் பயிற்சியை பற்றி பார்ப்போம்.

Friday, January 10, 2020

முகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 7.


               தன்னுடைய சுயநலத்தால் மக்கள் மனதில் மதவெறி ஊட்டி பலதர மக்களும் கூடிவாழ்ந்த இந்தியா என்னும் ஒரு ஆல விருட்சத்தை பிரிவினை என்னும் கோடாரியால் இரண்டாக வெட்டிப்பிளந்து பாகிஸ்தான் என்கிற ஒரு நாட்டை உருவாக்குவதில் வெற்றி கண்டார் ஜின்னா.


Monday, January 06, 2020

முகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 6.


               1946 ல் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்குவது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த தூதுக்குழு ஒன்றை பிரிட்டன் இந்தியாவிற்கு அனுப்பிவைத்தது. ஆனால் முஸ்லீம் லீக் பேச்சுவார்தையை சிதைக்கும் விதத்தில் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்களை தொடங்கியது.


Saturday, January 04, 2020

முகமது அலி ஜின்னா - Muhammad Ali Jinnah - பகுதி 5.


               காதல் மனைவியின் இறப்பு அவருக்கு வருத்தத்தை தந்தாலும் அரசியல் பணிகள் விரைவிலே அந்த வேதனைகளிலிருந்து அவரை எளிதில் விடுவித்தன.


               மனைவி இறந்த பின்பும் கூட தன் காதலுக்கு அடையாளமாக தனக்கு பிறந்த அந்த பச்சிளம் குழந்தையை விட்டு தள்ளியே இருந்தார் ஜின்னா.

Next previous home